இதோ எனது முதல் தமிழ் பதிவு, விவசாயத்தை பற்றி

இதோ எனது முதல் தமிழ் பதிவு, விவசாயத்தை பற்றி

இதோ எனது முதல் தமிழ் பதிவு, அதுவும் என் பாட்டன், அப்பன் பெருமையாக கருதிய விவசாயத்தை பற்றி. பல ஏக்கர்கள் கோணிகளாக சுருங்கியது. சற்றுமுன் சகோதரி ஒருவர் இந்த படத்தை சமூக ஊடகம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். சகோதரி தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். ஆனால் மனதில் ஏதோ ஒரு மூலையில் சிறிய நெருடல். வாழை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிகவும் பெரியது. இந்தியாவில் வாழை அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களில் தமிழகமும் ஒன்று. வாழை உற்பத்தியில் தேனி, திருச்சி, கரூர், ஈரோடு, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமாரி, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பங்கு அதிகம். அப்படி கன்றுகள் நட்டு, கிடங்கு வெட்டி,  அடிஉரம் இட்டு பலநூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வாழை இன்று ஒரு கோணிப்பையில் குலைதள்ளியுள்ளது. சிறுவயதில் அப்பாவுடன் காலையில் தூக்குசட்டியில் சோற்றை எடுத்துக்கொண்டு, மிதிவண்டியில் சிறுகாம்பூர் வாழைக்கு சென்ற…